by டேவிட் அண்ணா >>> "அவருடைய (ஆண்டவருடைய) மேன்மைக்கு என்னுடைய முழுமை" "My Utmost for His (God's) Highest" உலகில் இதுவரை எண்ணற்ற நிறுவனங்கள் தோன்றியுள்ளன. ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு குறிக்கோ ள்கள் உண்டு. ஆனால், இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்டு செயல்படும் நிறுவனங்கள், மனிதருக்கு வளத்தையும் உலகிற்கு முன்னேற்றத்தையும் அளிக்கின்றன. ‘உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு ம னதோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு இருதயத்தோடும் அன்புகூருவாயாக’ என்ற இவ் வசனத்தை அடிப்படையாகக் கொண்டு 1844 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதே அகில உலக கிறிஸ்தவ இளைஞர் இயக்கமாகும் (Y.M.C.A). ஜோர்ஜ் வில்லியம்ஸ் - George Williams (1821-1905) ஜோர்ஜ் வில்லியம்ஸ், இளம் வயதிலேயே மிகவும் சுறு சுறுப்பும் ஆர்வமும் நிறைந்தவராக கிறிஸ்தவ ஒழுக்கத்தில் வளர்க்கப்பட்டவர். கிறிஸ்தவ இளைஞர்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற வாஞ்சை அவருக்குள் காணப்பட்டது. தன் விருப்பத்தை ஜெபத்தின் மூலமாக ஆண்டவருக்கு தெரியப்படுத்தினார். அவரின் ஜெபம் கேட்கப்பட்டது. மே 6, 1844ஆம் ஆண்டு லண்டன் ...