Skip to main content

Posts

Showing posts from February, 2021

இந்தியாவுக்கு வந்த ஒரு உன்னத சீடன் - அப்போஸ்தலன் தோமா - பாகம் 01 | Thomas the Apostle | FOOTPRINTS OF MISSIONARIES

by  டேவிட் அண்ணா >>> ‘‘நீ வாழ்ந்தால் ஓர் கனி தரும் மரமாயிரு! மடிந்தால் ஓர் விதையாக மடி!’’ If you live, be a fruitful tree! If you fall, be a seed!   -Jei Nesha  - அன்பான தம்பி, தங்கைமார்களே, நீண்ட நாட்களுக்கு பின், மறுபடியும் உங்களை சந்திப்பதில் அண்ணாவுக்கு மிக்க மகிழ்ச்சி. நீங்கள் எல்லாரும் சுகமுடன் இருக்கிறீர்களா? ‘ஆம்’ என்று பலர் சொல்லும் சத்தம் என் செவியை எட்டுகிறது. சந்தோஷம்! இவ்வாரத்தில் நாம் கற்கவுள்ள இறைபணியாளரின் அடிச்சுவடுகளை பின்பற்றி; அவர் யார்? அவரின் வாழ்வு இன்று எமக்கு எவற்றை கற்றுத்தரவுள்ளது? என்பதை ஆராய்வோம், வாருங்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு சீடர்களின் பெயர்களை சொல்லுங்கள் என்று கேட்டால், சிலருடைய பெயர்களேதான் உடனடியாக எம்முடைய ஞாபகத்தில் வரும். மூன்று முறை மறுதலித்த பேதுரு, காட்டிக்கொடுத்த யூதாஸ், அன்பு சீடன் யோவான், வரிவசூலித்த மத்தேயு என்று சிலருடைய பெயர்கள்தான் முதலில் எம் வாயிலிருந்து புறப்படும். காரணம், அவை நம் மனதில் நன்றாய் பதிந்துள்ளது. ஆனால் இன்றைக்கு நாம் பார்க்கப்போகிற சீடன் பெயர் ‘திதிமு என்னப்பட்ட தோமா’. இவர் தான் நம் அண்டை நாட

குறுக்கெழுத்துப் புதிர் - 08 | CROSSWORDS - 08 | லூக்கா 01 - 08

by  ஷப்னிகா    அக்கா >>>  குறுக்கெழுத்துப் புதிர் -  08   லூக்கா  01 - 08 குறுக்கெழுத்துப் புதிர் -  08  க்கான விடைகள்  06.03.2021  அன்று   விடைகள்  | ANSWERS பக்கத்தில் வெளியிடப்படும்.

நம்பிக்கை | SHORT STORY

by ரஜீவனி அக்கா >>> ஒரு வணிகர் வியாபார ஒன்று கூடலில் கலந்து கொள்வதற்காக விமானம் ஏறினார். அது மூன்று பேர் அமரும் இருக்கை ஒரு நடுத்தர வயது பெண் ஜன்னலோரமும் , நடைபாதை அருகே ஒரு  சிறிய பெண்னும் இருந்தார்கள். இவர் அவர்கள் இருவரையும் பார்த்து புன்னகைத்தவாறே தனது பெட்டியை மேலே வைத்துவிட்டு நடுவில் அமர்ந்தார். அவர் அந்த சிறு பெண்ணை பார்க்கும்போது தனது மகளை நினைத்தார் இருவருக்கும் ஒரே வயதுதான் இருக்கும் ... அந்த பெண் அமைதியாக வண்ணம் தீட்டி கொண்டிருந்தாள். அவரும் அந்த பெண்ணிடம் எப்போதும் போல் பேர் என்ன பொழுதுபோக்கு என்ன என்று பேச்சு கொடுத்துக்கொண்டு வந்தார். அதே போல் உனக்கு  பிடித்த விலங்கு எது ??? போன்ற ஒரு சில வழக்கமான கேள்வியும், கேட்டு பேசிக்கொண்டு இருந்தார் . அவர் மனதில்  இந்த சின்ன பெண் தனியாக பயணம் செய்வது விசித்திரமாக பட்டது. ஆனால் அவர் தன்னை தனது எண்ணங்களை தன்னுள்ளே புதைத்து வைத்துக்கொண்டார்.  எனினும் பயணம் முழுவதிலும் அவள் மீது ஒரு கண் வைக்கவேண்டும் என நினைத்தார் ... அவரும் பெண்ணை பெற்றவரல்லவா ??? சுமார் ஒரு மணி நேர பயணத்திற்கு பின் , விமானம் திடீரென குலுங்க தொடங்கியது . பைல

கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்றவன் | GOSPEL ART GALLERY

by வதனி அக்கா   >>>  

காணாமல்போன ஆடு உவமை | QUILLING AND NEEDLEWORK

  by ஷரோன் அக்கா >>>   இயேசு சுவாமி மனந்திரும்புதலை குறித்து கூறிய உவமையை கீழே உள்ள வேலைப்பாடு சித்திரிக்கிறது. கீழே உள்ள வேத பகுதியை வாசித்து அவ் உவமையை அறிந்து கொள்வதோடு , நீங்களும் இது போன்ற ஒரு சித்திரிப்பை செய்து பார்க்கலாம். லூக்கா 15:3-7 அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது: உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாய் இருந்து , அவைகளில் ஒன்று காணாமற்போனால் தொண்ணுாறொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு , காணாமற்போன ஆட்டைக் கண்டு பிடிக்குமளவும் தேடித்திரியானோ ? கண்டுபிடித்தபின்பு , அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு , வீட்டுக்கு வந்து , சினேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டை கண்டுபிடித்தேன் என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா ? அதுபோல , மனத்திரும்ப அவசியமில்லாத தொண்ணுாறொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனத்திரும்பிகிற ஒரே பாவியின் நிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்கு சொல்கிறேன்.

தாய் போல தேற்றி | Thai Poala Thettri | MUSIC NOTES AND CHORDS

by  ஜெரேம் அண்ணா >>>

கர்த்தருக்கென வழியை ஆயத்தம் செய்தல் | BIBLE STUDY

  by  பிறேமன் அண்ணா >>> இயேசு சுவாமி இந்த பூவுலகில் வந்து பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதற்கு முன் , அவருக்கு வழியை ஆயத்தம் செய்யும்படி யோவான் ஸ்நானகன் தெரிவு செய்யப்பட்டார். இயேசு சுவாமியின் வருகைக்கு இப்பூவுலகின் மாந்தரை ஆயத்தம் செய்யும் பொறுப்பு யோவான் மேலே விழுந்தது. இப்படியான ஒரு உன்னதமான ஊழியத்துக்கு தெரிவு செய்யப்பட்ட யோவானைக் குறித்தும் அவரது அதிசயமான பிறப்பைப் பற்றியும் முன்னறிவிக்கப்பட்டதை நாம் அநேகர் அறிவோம். இப்படியாக அறிவிக்கப்பட்ட அந்த ஆச்சரியமான செய்தியிலிருந்தே இன்று நாம் சில ரகசியங்களை தெரிந்துகொள்வோம். லூக்கா 1 ம் அதிகாரத்திலே , யோவானின் பிறப்பைப் பற்றி முன்னறிவிக்கப்படும் பகுதியை நாம் பார்ப்போமானால் , சகரியாவுக்கும் எலிசபெத்துக்கும் பிறக்கப்போகும் இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்கும் என அறிவிக்கப்படுவதை நாம் காணலாம். 1 ம் அதிகாரத்தின் 15 ம் வசனம் இப்படியாய் சொல்கிறது. “ அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாய் இருப்பான் , திராட்சரசமும் மதுவும் குடியான் , தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். ” ( லூக்கா 1:15) இந்த வசனத்திலிர

அதிகாரமுடையவர்... | GOSPEL ART GALLERY

by வதனி அக்கா   >>>

ஞானத்துடன் செயற்படுவோம் | SHORT STORY

by ரஜீவனி அக்கா >>> ஓர் கிராமத்தில் அந்தோனி எனும் ஒரு ஏழை மனிதன் வசித்து வந்தார். அவர் நேர்மையானவரும் சிறந்த உழைப்பாளியுமாக இருந்தார். அவர் ஓர் நாள் ஊருக்கு ஒதுக்கு புறம் இருந்த ஒரு பொது நிலமொன்றில் ஒரு மாமரக் கன்றை நட்டார். அதை தினமும் கரிசனையுடன் பாதுகாத்து நீரூற்றி வளர்த்து வந்தார். வருடங்கள் ஓடின.... சிறிய மரமானது பெரிய விருட்சமாக செழிப்பாக வளர்ந்து நின்றது. இந்த மரம் ஊரில் இருந்த மற்றைய மாமரங்களை விட மிகவும் இனிமையான கனிகளை தந்து கொண்டிருந்தது... அதின் கனிகளை விற்று பணமாக்கியது போக மீதமானதை மற்றவர்களுக்கு கொடுத்து பகிர்ந்து வந்தார். அதே ஊரிலே சபரி என்னும் பேர் கொண்ட ஒருவன் இருந்தான். அவன் ஒரு ஏமாற்றுப் பேர்வழி... மற்றவர்களுடைய உடைமைகளை ஏமாற்றி அபகரிப்பதில் கில்லாடியாக இருந்தான். அது மட்டுமல்லாமல் தனது முரட்டுக் குணத்தால் மற்றவர்களின் பயத்தையும் பெற்றிருந்தான்... சபரி , அந்தோனி நட்ட மாமரத்தின் மேல் கண் வைத்தான்... எப்படியாவது அந்த மரத்தை தனக்கு சொந்தம் கொண்டாடி அதின் முழு பலனையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற கெட்ட சிந்தனை அவனுக்கு ஏற்பட்டது. இதனால் அவன் ஒரு போலி நாடகத

குறுக்கெழுத்துப் புதிர் - 07 | CROSSWORDS - 07 | மாற்கு 09 - 16

by  ஷப்னிகா  அக்கா >>> குறுக்கெழுத்துப் புதிர் - 07 மாற்கு 09 - 16 குறுக்கெழுத்துப் புதிர் - 07 க்கான விடைகள் 26.02.2021 அன்று  விடைகள் | ANSWERS பக்கத்தில் வெளியிடப்படும்.

தேவனுக்குள் கீழ்ப்படிந்து இருப்போம் | SHORT STORY

by ரஜீவனி அக்கா >>> மகனை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு தந்தையின் உணர்வு பூர்வமான எச்சரிக்கை.... தன் மகன் நிரோமை சில விசயங்களுக்காக அடிக்கடி கடிந்து கொள்வதால் நிரோம் தந்தையிடம் கேட்டான்... "ஏன் அப்பா எப்பவும் இப்படி கண்டிப்புடன் நடத்துகிறீர்கள்...??? என்னை கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே" என்று.... ஆனால் அதை தந்தை சற்று கஷ்டமாகவே உணர்ந்தார்... இதை எப்படி இவனுக்கு சொல்லிக்கொடுப்பது என யோசித்தார்... ஒரு நாள் நிரோம் தன் தந்தையிடம் வந்து கேட்டான்.. "அப்பா நான் பட்டம் விட்டு விளையாடபோகிறேன், நீங்களும் வாங்க.." என அழைத்துக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றான்... பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தான்... அப்படி மகிழ்ந்திருக்கும் வேளையில் தந்தை கேட்டார்... "பட்டம் மேலே பறக்க, பறக்க எவ்வளவு அழகாய் இருக்கிறது.... ஆனால் அதன் விருப்பம் போல பறக்க முடியவில்லை.. அதற்கு தடையாய் இருப்பது என்னவாக இருக்கும்?" என கேட்டார்... நிரோம் பட்டென பதில் சொன்னான்; "இந்த நூல் தான் அதை தன் இஷ்டத்திற்கு விடாமல் கட்டி வைத்திருக்கிறது" என்று சொன்னான்.. "அப்ப