கிறிஸ்து இயேசுவுக்குள் அன்பான தம்பி தங்கைமாரே,
"இளையசீஷர்" BLOG இனூடாக உங்களை சந்திப்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இப்படியான ஒரு சந்தர்ப்பத்தைத் தந்த ஆண்டவர் இயேசு சுவாமிக்கு நாம் நன்றி சொல்லுவோம். "இளையசீஷர்" ஊழியம் எனக்கு ஆண்டவர் கொடுத்த ஒரு நீண்ட கால தரிசனம். இயேசு சுவாமியின் எதிர்கால சீடர்களாகிய உங்களை நாம் வாழும் சமூகத்தின் சிறந்த, முன்மாதிரியான தலைவர்களாக உற்சாகப்படுத்தி உங்கள் எதிர்கால சாட்சியுள்ள வாழ்வைப்பார்த்து பார்த்து மனதார ரசித்து ஆண்டவரை மகிமைப்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய ஒரே விருப்பம்.
இயேசு சுவாமி எம் ஒவ்வொருவரையும் தமது உண்மையுள்ள சீஷர்களாய் வாழ அழைத்திருக்கிறார். இந்த இளம் வயதிலேயே நாம் நமது உயிருள்ள ஆண்டவருக்காக சாட்சியாக வாழ, ஆண்டவரோடு நெருங்கி நடக்க, அவரோடு உறவாட, வேதத்தின் ரகசியங்களைப் புரிந்து கொள்ள, அவருக்காய் ஓடி ஓடி அநேக காரியங்களைச் செய்ய, ஆண்டவருக்கு ஊழியம் செய்யும் உண்மையுள்ள தலைவர்களாய் உருவாகி ஆயத்தப்பட அவர் நம்மை அழைத்திருக்கிறார். ஆகவே, இந்த வயதிலே ஆண்டவரின் சீஷராய் நீங்கள் வளர உங்களை ஊக்கப்படுத்த நான் ஆசையாய் இருக்கிறேன். உங்களோடு இணைந்து அநேக புது காரியங்களை அறியவும் நான் ஆவலாய் உள்ளேன். இந்த "இளையசீஷர்" இனூடாக ஆண்டவர் அநேக எதிர்கால தலைவர்களை உருவாக்குவார் என நான் நம்புகிறேன்.
இந்த ஊழியத்தில் கிறிஸ்துவுக்குள் உங்களுக்கு அன்பான சில அண்ணாமாரும் அக்காமாரும் தங்களது பெறுமதியான நேரத்தை ஒதுக்கி என்னோடு இணைந்திருக்கிறார்கள். நீங்கள் எல்லாரும் ஆண்டவருக்காய் சாட்சியான பெரிய தலைவர்களாய் உருவாகவேண்டும் என்பதே அவர்களுடைய விருப்பமுமாகும். நீங்களும் ஊக்கத்தோடு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இங்கு வந்து, ஒரு புது காரியத்தைப் அறிந்து, படித்து, இயேசு சுவாமியின் சிறந்த சீஷர்களில் ஒருவராய் உருவாக நான் உங்களை அன்போடு அழைக்கிறேன். நமது பிதாவின் மகிமையும், இயேசு சுவாமியின் அன்பும், பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னமும் நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவதாக.
இப்படிக்கு,
கிறிஸ்து இயேசுவுக்குள் உங்கள் அன்பின்
பிறேமன் அண்ணா
Ebenezer Breman Veerasingam
HARVEST INTERNATIONAL MINISTRIES,
BATTICALOA, SRI LANKA
இளையசீஷர்
MINISTRY TEAM
"ஜெரேம் அண்ணா"
Jarem Umeshad Jayakaran
FOOTPRINTS OF MISSIONARIES
"டேவிட் அண்ணா"
David Sahayanathan
CROSSWORDS
"ஷப்னிகா அக்கா"
Stella Shapnika Jayakaran
QUILLING AND NEEDLEWORK
"ஷரோன் அக்கா"
Sharon Vithushini Vijayan
SHORT STORIES
"ரஜீவனி அக்கா"
"வதனி அக்கா"
Comments
Post a Comment
Comments