Skip to main content

Posts

Showing posts from 2021

ஆபிரிக்காவின் வெள்ளை ராணி – மிஷனரி. மேரி ஸ்லேசர் அம்மையார்

  by  டேவிட் அண்ணா >>> ஆபிரிக்காவின் வெள்ளை ராணி – மிஷனரி. மேரி ஸ்லேசர் அம்மையார் ; (1848 – 1915) மேரி ஸ்லேசர் 1848 ம் ஆண்டு ஒக்டோபர் இரண்டாம் திகதியன்று ஸ்கொட்லாந்திலுள்ள ஏபர்டீன் எனும் ஊரில் பிறந்தார். இவர் கிறிஸ்துவை தன் வாழ்வின் இரட்சகராக ஏற்றுக்கொண்ட நாள் முதற்கொண்டு , கிறிஸ்துவுக்காக துணிச்சலோடும் துடிதுடிப்போதும் இறைபணியாற்றி வந்தார். ஆப்பிரிக்கா கண்டம் , டேவிட் லிவிங்ஸ்டன் என்ற மாபெரும் மிஷனரியை இழந்து தவித்த சமயம் அது. ஆபிரிக்காவிற்கு செல்லவோ ஆட்கள் இல்லை. அத்தருணத்தில் , அம் மிஷனரி ஊழியத்திற்கு தன்னை அர்ப்பணம் செய்தார் மேரி ஸ்லேசர்.   கலபார் நதி , இன்றைய நைஜீரியா. அதுவே மேரியின் தரிசன பூமியாயிருந்தது. ஆனால் அன்று அவ்வூர் மக்களின் நிலைமை படுமோசமாக இருந்தது. மனிதர்கள் மனிதர்களாகவே இல்லை. வாழ்க்கைக்கானச் சட்டமோ , ஒழுக்கமான வாழ்க்கை முறையோ அங்கு இருக்கவில்லை. மாறாக மூடப்பழக்கவழக்கங்கள் மலிந்து கிடந்தன. அந்தோ பரிதாபம்! இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள் ஓர் தாய். குழந்தைகளின் உடல் ஈரம் காய்வதற்கு முன்னே , கொடூரன் ஒருவனின் கை , மூர்க்கமாய் பாய்ந்தது அக்குழந்தைகள்

வழி ஏற்படுத்துகிறவர் | GOSPEL ART GALLERY

  by  வதனி அக்கா   >>>    

தீர்க்கதரிசி | GOSPEL ART GALLERY

by  வதனி அக்கா   >>>    

நீதிமான் | GOSPEL ART GALLERY

by  வதனி அக்கா   >>>  

மருத்துவ மிஷனரி - இசபெல்லா கேர் அம்மையார்

by  டேவிட் அண்ணா >>> மருத்துவ மிஷனரி - இசபெல்லா கேர் அம்மையார் ‘கொத்தி பேய்’ - யாழ்ப்பாண வீடுகள்தோறும் பல தசாப்தங்களுக்கு முன்பு வரை பயந்திருந்த விடயம். குடும்பங்களில் ஒரு குழந்தை பிறந்தவுடன் ஐந்தாம் நாள் அக்குழந்தையை கொத்தி பேய் கொண்டு சென்றுவிடுமோ என்ற பயம் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தது. சரியான பரிகாரங்களைச் செய்தால் தான் அக்குழந்தையை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை சமூகத்திற்குள் உருவாகி இருந்தது. மேலும் அப்பரிகாரங்களைச் செய்ய பிரசவம் பார்த்த மருத்துவச்சிகளுக்கு மட்டுமே தெரியும் என்ற பிம்பத்தை அக்கால மருத்துவச்சிகளும் தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்தி கொண்டார்கள். பிரசவ அறையிலே குழந்தை பிறந்தவுடன் கொத்தி பேய்க்கு பலவித கறிகளுடன் உணவு சமைத்து பிரசவம் பார்த்த மருத்துவச்சி மூலம் படைப்பார்கள். பிறகு அம்மருத்துவச்சி பந்தம் ஒன்றை பற்ற வைத்து தாயையும் பிள்ளையையும் ‘நல்லா இருங்கோ நல்லா இருங்கோ’ என வாழ்த்தி விட்டு சகல அறைகளிலும் “செத்தேக்க பத்தேக்க நில்லாத கொத்தியாத்த” என்று பாடுவாள். பிறகு பேயை அழைத்து செல்கிறேன் என்று கூறி பிரசவம் நடந்த பாய்,தலையனை,சேலை முதலியவற்றை சுருட்டிக்கொண்டு அப

மருத்துவ மிஷனரி - ஜோன் ஸ்கடர் ( Medical missionary - Dr. John Scudder Sr.)

by  டேவிட் அண்ணா >>> மருத்துவ மிஷனரி - ஜோன் ஸ்கடர் (Dr. John Scudder Sr.) - கி.பி.1793 - 1855 மருத்துவர் ஐடா ஸ்கடரை (Dr. Ida Scudder) பற்றி கேள்விப்படாதோர் யாருமே இருக்கமாட்டோம். ஆனால் முன்னோடி மருத்துவ மிஷனரியான அவரது தாத்தா ஜோன் ஸ்கடர் சீனியர் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தாத்தா ஜோன் ஸ்கடரில் ஆரம்பித்து பேத்தி ஐடா ஸ்கடர் வரை இரண்டு தலைமுறைகளாக ஸ்கடர் குடும்பத்தினர் இலங்கையர், இந்தியருக்கு மருத்துவ மற்றும் ஆன்மீக சேவை செய்திருக்கிறார்கள். என்னவொரு அர்ப்பணிப்பு பாருங்கள். இன்று ஜோன் ஸ்கடர் பற்றி ஒருசில காரியங்களை தெரிந்து கொள்ளலாம். அவர் 1793ம் ஆண்டு செப்டெம்பர் 3ம் திகதி அமெரிக்காவின் நியூ ஜேர்சி மாகாணத்தில் ப்ரிஹோல்ட் எனும் ஊரில் (Freehold, New Jersey, USA) பிறந்தார். சிறுவயதிலிருந்தே தேவையுள்ளோருக்கு உதவும் இரக்க குணம் நிறைந்தவராகக் காணப்பட்டார். எப்போதுமே ஜோனிற்கு கிறிஸ்தவ மனநிலை உண்டு என அவரது குழந்தைப் பருவம் பற்றி அவரது அம்மா கூறியிருக்கிறார். படிப்பில் கெட்டிக்காரனாகவிருந்த அவர் Princeton University மற்றும் New York College of Physicians and Surgeons இல் ம

ஜோன் விக்ளிப் (John Wycliffe)

by  டேவிட் அண்ணா >>> ஜோன் விக்கிளிப் என்பவர் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘திருச்சபை சீர்திருத்தத்தின் விடிவெள்ளி’   ( The Morning Star of Reformation )  என்றும் ‘எழுதுகோல் புரட்சியாளர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அக்கால திருச்சபையில் அதிக சக்திவாய்ந்த மனிதராக கருதப்பட்ட போப்பினதும் உரோமன் கத்தோலிக்க திருச்சபையினதும் தவறான கொள்கைகளுக்கு எதிர்த்து நின்றவர். அத்துடன் கிறிஸ்துவுக்காகவும், சத்தியவசனத்திற்காகவும் மரிக்கவும் ஆயத்தமாயிருந்தவர். 14ம் நூற்றாண்டில் திருச்சபையில் ஓர் விழிப்புணர்வு வருவதற்கு  ‘Peter Waldo’  இற்கு பிறகு இவரும் ஓர் முக்கிய காரணமாக இருந்தார்.  ஜோன் விக்கிளிப் கி.பி. 1330ம் ஆண்டில் இங்கிலாந்திலுள்ள யோர்க்சயர்  ( Yorkshire )   எனும் இடத்திலுள்ள ஹிப்ஸ்வெல்  ( Hipswell )  என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை ரோஜர் விக்ளிப், தாயார் கத்தரின். ஜோன் விக்ளிப் தனது 17ம் வயதில்  Oxford University   இல் சட்டப்படிப்பைப் படிக்கச் சென்றார். அங்கு மிகவும் தலைசிறந்த மாணவனாக அவர் திகழ்ந்தார்.  Arch Bishop  ஆகவிருந்த அவருடைய பேராசிரியர் வேதாகம போதனையை அவருக்கு கற்பித்தார். ந

ஜோன் ஹஸ் (JOHN HUSS, 1360-1415 A.D.)

by  டேவிட் அண்ணா >>> ஆரம்ப சபைசீர்திருத்தப் பிதாக்களில் ஒருவரான ‘ஜோன் ஹஸ்’, ஓர் வறிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். தேவன் இவருக்கு அளித்திருந்த திறமையையும் ஞானத்தையும் இவர் சரியாகப் பயன்படுத்தியதால் ஜரோப்பாவில் பாரிஸ் (Paris), ஒக்ஸ்போர்ட் (Oxford) பல்கலைக்கழகங்களை விட அக்காலத்தில் செல்வாக்கு மிகுந்ததாயிருந்த பிராக் (Prague) பல்கலைக்கழகத்தில் போதகராக பணியாற்றும் பொறுப்பு இவருக்குக் கிடைத்தது. ஹஸ் மெய்யான மனந்திரும்புதலைப் பெற்று பொகீமிய மொழியில் (Bohemian) பிரசங்கம் செய்யக்கூடிய சிறந்த பிரசங்கியாராக இருந்தார். சுவிசே~த்தை மிகவும் உணர்ச்சியுடனும், ஆர்வத்துடனும் பிரசங்கித்து பொதுவாக பாவச் செயல்களையெல்லாம் கண்டித்து வந்தார். அந்தவகையில், ஏனைய மதகுருமார்களுடைய உலகப்பிரகாரமான வாழ்க்கையையும், பக்திவிருத்தியற்ற நடைமுறையையும் அவர் கண்டித்துப் பிரசங்கிக்க அவர்கள் இவருக்கு எதிரிகளாக மாறினர். அக்காலத்தில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துக்கும், பிராக் பல்கலைக்கழகத்துக்கும் பெருந்தொடர்புகள் இருந்ததால் தலைசிறந்த கல்விமானும், சபை சீர்திருத்த முன்னோடியுமாயிருந்த ஜோன் விக்கிளிப் (John W

கிறிஸ்தவ வழிபாட்டில் விக்கிரக ஆராதனை சூட்சுமமாய் உள்நுழைந்த வரலாறு

by  டேவிட் அண்ணா >>> கி.பி.7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மகா கிரெகரி சபைகளில் படங்களும், விக்கிரகங்களும் இருக்க அனுமதி தந்திருந்தார். ஆனால், அவற்றை வழிபடவோ, வழிபாட்டுக்குத் துணையாகவோ பயன்படுத்தக்கூடாது என்ற தடையும் இருந்தது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இது மாறி படங்களுக்கு முன் நின்று ஜெபிப்பதும், முத்தமிடுவதும், படங்களைச்சுற்றி நின்று வழிபாடு செய்வதும் ஆரம்பித்ததால் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை ‘விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள்’ என்று குற்றம் சாட்டினார்கள்.  படங்களும், விக்கிரகங்களும் அழகாக இருக்கும் என்றும், சமய போதனைகள் நடத்துவதற்கு துணையாக இருக்கும், விக்கிரகங்ளென்பது புறஜாதியார் வழிபடும் சிற்பங்களைத் தான் குறிக்கிறது மாறாக நம்முடைய கடவுளை வழிபட நாம் உண்டாக்கிய சிற்பங்களை அவை குறிக்காது என்றெல்லாம் தவறாகவும் வேதாகம சத்தியத்திற்கு முரணாகவும் காரணங்காட்டி படங்களையும், விக்கிரகங்களையும் வழிபாட்டில் பயன்படுத்த அனுமதித்தவர்களுடைய செயல்களை முஸ்லீம்கள் கூடப் பார்த்து சிரிக்கும் நிலை உருவாகியது துக்ககரமானதே. கி.பி. 726 ஆம் ஆண்டில் கிழக்குப் பிராந்தியத்தின் பேரரசாக இருந்த 3ம் லியோ விக்கிர

அமெரிக்க மிஷனரி டேவிட் பிறேய்நாட் | American missionary - David Brainerd | (1718 -1747)

by  டேவிட் அண்ணா >>> David Brainerd  சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் ஜீவித்திருந்த போதிலும் இன்றும் மங்கா புகழ் பெற்று விளங்குகிறார். காரணம் அவருக்கிருந்த ஆத்தும தாகம் அத்தனை விலையேறப்பெற்றது. எம்மையும் இன்று ஒரு கணம் அவரை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. 29 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இவர் வசதியான வாழ்க்கையை விட்டு எளிமையான செவ்விந்திய மக்களிடையே சென்று தேவனுடைய ஊழியத்தைச் செய்தார். 1718, ஏப்ரல் மாதம் 20ம் திகதி அமெரிக்காவிலுள்ள ‘ Haddam ’ என்ற ஊரில் பிறந்தார். தனது ஒன்பதாவது வயதில் தன் தந்தையாரை இழந்தார். பின்னர்; பதினான்காம் வயதில் தனது தாயாரை இழந்து அனாதையாக விடப்பட்டார். அதனால் சிறுவயது முதல் சோக மனப்பான்மை உடையவராகக் காணப்பட்டார். பாவத்தைக் குறித்த பயம் இல்லாவிட்டாலும் தன் சரீர பெலவீனத்தினிமித்தம் மரணத்தைக் குறித்த பயம் இவரிடம் காணப்பட்டது. கெட்ட வாலிபருடைய சகவாசத்தை விரும்பாவிட்டாலும் களியாட்டுக்கள் அவருக்கு அதிக பிரியமாயிருந்தது. எவ்வளவு ஆவலுடன் அங்கு செல்வாரோ, அதே ஆவலோடு திரும்பாமல் மனச்சாட்சியில் கறை படிந்தவராய் வேதனையோடு வீடு திரும்புவார். 1737ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ‘ட்ரம்