"அவருடைய (ஆண்டவருடைய) மேன்மைக்கு என்னுடைய முழுமை"
"My Utmost for His (God's) Highest"
உலகில் இதுவரை எண்ணற்ற நிறுவனங்கள் தோன்றியுள்ளன. ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு குறிக்கோள்கள் உண்டு. ஆனால், இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்டு செயல்படும் நிறுவனங்கள், மனிதருக்கு வளத்தையும் உலகிற்கு முன்னேற்றத்தையும் அளிக்கின்றன.
‘உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு மனதோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு இருதயத்தோடும் அன்புகூருவாயாக’ என்ற இவ் வசனத்தை அடிப்படையாகக் கொண்டு 1844 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதே அகில உலக கிறிஸ்தவ இளைஞர் இயக்கமாகும் (Y.M.C.A).
ஜோர்ஜ் வில்லியம்ஸ், இளம் வயதிலேயே மிகவும் சுறுசுறுப்பும் ஆர்வமும் நிறைந்தவராக கிறிஸ்தவ ஒழுக்கத்தில் வளர்க்கப்பட்டவர். கிறிஸ்தவ இளைஞர்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற வாஞ்சை அவருக்குள் காணப்பட்டது. தன் விருப்பத்தை ஜெபத்தின் மூலமாக ஆண்டவருக்கு தெரியப்படுத்தினார். அவரின் ஜெபம் கேட்கப்பட்டது.
மே 6, 1844ஆம் ஆண்டு லண்டன் மாநகரத்தில் மிகுந்த ஜெபத்துடன் Y.M.C.A என்ற அமைப்பை உருவாக்கினார். உலகத்தின் எல்லா பகுதிகளிலுமுள்ள கிறிஸ்தவ இளைஞர்களை இயேசு கிறிஸ்துவுக்கு நேராக வழிநடத்தி, அவரை தங்கள் சொந்த மீட்பராகவும், கடவுளாகவும் ஏற்றுக்கொண்டு, அவரின் ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த தம்மை அர்ப்பணித்து ஒன்றுபட்டு உழைக்கச் செய்யவைப்பதே இச் சங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
1855ஆம் வருடம், இது பன்னாட்டு சங்கமாக உயர்வு பெற்று, இன்று சுமார் 150 நாடுகளில், கிளை சங்கங்களை ஆரம்பித்து, சிறப்புடன் செயற்பட்டு வருகின்றது. மனிதனின் உடல், உள்ளம், ஆவி ஆகிய மூன்றும் ஒன்றாக முழுமையடைய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. உலக அமைதி, உலக சமத்துவம், சமூக நீதி போன்றவை வளர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இச் சிறந்த நிறுவனத்தை ஆரம்பித்த வில்லியம்ஸ் இளைஞர்களின் வழிகாட்டியாக இவ்வுலகில் வாழ்ந்து காட்டினார்.
அன்பின் தம்பியே தங்கையே!
உமது பணியினால் யாருடைய வாழ்வு மேம்படுகிறது?
‘அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக!’ (பிலிப்பியர் 2:4)
‘ஆத்துமாக்களை (கிறிஸ்துவுக்காக) ஆதாயப்படுத்திக் கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்;’ (நீதி.11:30)
***
Comments
Post a Comment
Comments