by டேவிட் அண்ணா >>> மருத்துவ மிஷனரி - இசபெல்லா கேர் அம்மையார் ‘கொத்தி பேய்’ - யாழ்ப்பாண வீடுகள்தோறும் பல தசாப்தங்களுக்கு முன்பு வரை பயந்திருந்த விடயம். குடும்பங்களில் ஒரு குழந்தை பிறந்தவுடன் ஐந்தாம் நாள் அக்குழந்தையை கொத்தி பேய் கொண்டு சென்றுவிடுமோ என்ற பயம் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தது. சரியான பரிகாரங்களைச் செய்தால் தான் அக்குழந்தையை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை சமூகத்திற்குள் உருவாகி இருந்தது. மேலும் அப்பரிகாரங்களைச் செய்ய பிரசவம் பார்த்த மருத்துவச்சிகளுக்கு மட்டுமே தெரியும் என்ற பிம்பத்தை அக்கால மருத்துவச்சிகளும் தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்தி கொண்டார்கள். பிரசவ அறையிலே குழந்தை பிறந்தவுடன் கொத்தி பேய்க்கு பலவித கறிகளுடன் உணவு சமைத்து பிரசவம் பார்த்த மருத்துவச்சி மூலம் படைப்பார்கள். பிறகு அம்மருத்துவச்சி பந்தம் ஒன்றை பற்ற வைத்து தாயையும் பிள்ளையையும் ‘நல்லா இருங்கோ நல்லா இருங்கோ’ என வாழ்த்தி விட்டு சகல அறைகளிலும் “செத்தேக்க பத்தேக்க நில்லாத கொத்தியாத்த” என்று பாடுவாள். பிறகு பேயை அழைத்து செல்கிறேன் என்று கூறி பிரசவம் நடந்த பாய்,தலையனை,சேலை முதலியவற்றை சுருட்டிக்கொண்ட...