by டேவிட் அண்ணா >>> அன்புள்ள தம்பி தங்கைமாரே, நம்முடைய வாழ்க்கை தேவனுடைய கைகளில் இருக்கிறது என்பதை அறிவீர்களா? ஆமாம். இந்த உண்மையை விளங்கிக்கொள்ள நாம் ஒரு உவமையைப் பார்ப்போமா? உங்கள் எல்லோருக்கும் பென்சில்கள் நன்றாக தெரியும்தானே? நாம் நாளாந்தம் பயன்படுத்தும் சாதாரணமான பென்சில்களையே கூறுகிறேன். ஆம், நாம் எல்லோரும் நமது பரம பிதாவின் கரங்களில் ஒரு பென்சிலைப் போல உள்ளோம் என்பதை அறிவோமாக. பென்சில்கள் பல மூலப்பொருட்களின் சேர்க்கையினால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதனுள் காரீயம், மரத்துண்டு, நிறப்பூச்சு எனப் பல்வேறுபட்ட பொருட்கள் காணப்படுகின்றன. இதே போலவே, நம்மையும் பிதாவின் கைகளில் உள்ள ஒரு பென்சில் என்பதாக நினைத்தோமானால், இந்த பென்சில்களின் பகுதிகள் போலவே நம்மையும் அறிந்துகொள்ளலாம். பென்சிலில் நாம் அறிந்துகொண்ட மூலப்பொருட்களுக்குள், காரீயம் என்பது நம்மைக்குறிக்கும். ஆனாலும், வெறும் காரீயத்தைக் கொண்டு அழகாக எழுத முடியுமா? இல்லையே. ஆகவே, அதனைச் சுற்றிக் "கிருபை" என்ற மரத்துண்டை ஆண்டவர் அழகாக நம்மேல் போர்த்திருக்கிறார். ஆகவே, காரீயமும், காரீயத்தைச் சுற...