by டேவிட் அண்ணா >>> ‘ஒரு மிஷனரி என்பவன் வெறும் சுவிசேஷம் அறிவிப்பவனாக மாத்திரம் இருக்கக்கூடாது. தான் ஊழியம் செய்கிற மக்கள் கூட்டத்தில் ஒட்டுமொத்த சமுதாய மாற்றத்தை உண்டுபண்ண வேண்டும். எந்தவிதத்திலும் அவர்கள் விட்டுவந்த பாவபழக்கத்திற்கு திரும்பிவிடக்கூடாது.’ றொபர்ட் மோபட்டும் அவரது மனைவியும் இதை நன்கு உணர்ந்து ஊழியம் செய்தனர். மிகவும் தாழ்மையாக ஊழியம் செய்து ஆபிரிக்க மக்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காக தங்கள் வாழ்நாளை தியாகம் செய்தவர்கள் இவர்கள். றொபட் மோபட், 1795ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதியன்று ஸ்கொட்லாந்து தேசத்தில் பிறந்தார். இவரது தாய் வேதத்தை நேசிக்கவும், அதைத் தியானிக்கவும் கற்றுக்கொடுத்தார். தவறாமல் ஆலயம் சென்று வந்தார் றொபர்ட். அந்த ஆலயத்திலிருந்த போதகர் வயதான காரணத்தால் போதக பொறுப்பிலிருந்து ஓய்வு பெற எண்ணினார். அவர், தன்னுடைய இத்தனை வருடகால ஊழியத்தின் மூலம் யாரேனும் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்களா? என்பதை சிந்தித்துக்கொண்டு ஆலய வளாகத்தில் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தார். திடீரென்று ஓர் அழுகையின் சத்தம். அந்த திசை சென்று பார்த்தால் அங்கு புதருக்குப் பின்...