by பிறேமன் அண்ணா >>> அன்புள்ள தங்கை தம்பிமாரே, இன்று நான் உங்களுடன் ஒரு அழகான, பிரபலமான சித்திரம் பற்றியும், அதற்குப் பின்னாக இருக்கும் கதை பற்றியும் பகிர்ந்துகொள்ளப்போகிறேன். உங்களில் எத்தனை பேர் மேலே காணப்படும் "FOOTPRINTS/கால்சுவடுகள்" என்ற படத்தை/சித்திரத்தை எங்காவது பார்த்திருக்கிறீர்கள்? அதிகமாக, நமது இல்லங்களில் இந்தப் படமானது ஒரு ஆங்கில கவிதையோடு (English Poem) சேர்த்து அச்சிடப்பட்டு சுவர்களில் மாட்டப்பட்டு இருப்பதை காணமுடியும். ஆனாலும், எப்போதாவது இந்த படத்தின் அர்த்தம் என்ன, இதை ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இல்லங்களின் சுவர்களிலே மாட்டிவைத்திருக்கிறார்கள் என்று நீங்கள் சிந்தித்ததுண்டா? அப்படி என்ன விசேஷம் உண்டு என அறிந்துகொள்ளுவோமா? இயேசு சுவாமியின் சீஷராய் வாழ விரும்பும் நம் ஒவ்வொருவருக்கும் இந்தப் படத்திலே ஒரு ஆழமான உண்மை மறைந்திருக்கிறது. 1964ம் ஆண்டு எழுதப்பட்டிருக்கக்கூடும் என கருதப்படும் இந்த ஆங்கில கவிதை யாரால் எழுத்தப்பட்டது என்பது இன்றைக்குவரைக்கும் ஒரு கேள்வியான விடயமே. அதிகப்படியான ஆராய்ச்சி...