Skip to main content

ஜோன் ஹஸ் (JOHN HUSS, 1360-1415 A.D.)


by டேவிட் அண்ணா

>>>

ஆரம்ப சபைசீர்திருத்தப் பிதாக்களில் ஒருவரான ‘ஜோன் ஹஸ்’, ஓர் வறிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். தேவன் இவருக்கு அளித்திருந்த திறமையையும் ஞானத்தையும் இவர் சரியாகப் பயன்படுத்தியதால் ஜரோப்பாவில் பாரிஸ் (Paris), ஒக்ஸ்போர்ட் (Oxford) பல்கலைக்கழகங்களை விட அக்காலத்தில் செல்வாக்கு மிகுந்ததாயிருந்த பிராக் (Prague) பல்கலைக்கழகத்தில் போதகராக பணியாற்றும் பொறுப்பு இவருக்குக் கிடைத்தது. ஹஸ் மெய்யான மனந்திரும்புதலைப் பெற்று பொகீமிய மொழியில் (Bohemian) பிரசங்கம் செய்யக்கூடிய சிறந்த பிரசங்கியாராக இருந்தார். சுவிசே~த்தை மிகவும் உணர்ச்சியுடனும், ஆர்வத்துடனும் பிரசங்கித்து பொதுவாக பாவச் செயல்களையெல்லாம் கண்டித்து வந்தார். அந்தவகையில், ஏனைய மதகுருமார்களுடைய உலகப்பிரகாரமான வாழ்க்கையையும், பக்திவிருத்தியற்ற நடைமுறையையும் அவர் கண்டித்துப் பிரசங்கிக்க அவர்கள் இவருக்கு எதிரிகளாக மாறினர்.

அக்காலத்தில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துக்கும், பிராக் பல்கலைக்கழகத்துக்கும் பெருந்தொடர்புகள் இருந்ததால் தலைசிறந்த கல்விமானும், சபை சீர்திருத்த முன்னோடியுமாயிருந்த ஜோன் விக்கிளிப் (John Wycliff)  என்பவரது அறிமுகம் கிடைத்து, அவரது போதனைகளும், எழுத்தாக்கங்களும் பிராகை வந்தடைந்தன. அப்போதனைகள் ஜோன் ஹஸ் மற்றும் அவரைச் சார்ந்தவர்களை பெரிதும் கவர்ந்தன. காலங்கள் கடந்தன. ஹஸ்ஸின் இறைபணி வளர்ச்சி கண்டது. அனேகர் பாவ வரழ்க்கையை விட்டு மனந்திரும்பி, இயேசுவை தம் சொந்த இரட்சகராக ஏற்று, வேதாகம சத்தியத்தில் படிப்படியாக வேரூன்றி வாழ ஆரம்பித்தனர். இதனால் வெறுப்படைந்த, ஜெமார்னியர்கள் ஹஸ் போலிப்போதனைகளை அளிப்பதாக குற்றஞ்சாட்டினர். பிராங்கின் பொது இடங்களில்; ஜோன் ஹஸ்ஸின் நூல்கள் எரிக்கப்பட்டன. அந்நகரின் Arch Bishop ஹஸ்ஸின் பிரசங்கத்தைத் தடைசெய்ய முயன்றார்.

இறுதியில் கான்ஸ்டன்ஸில் (Constance) இருந்த கவுன்சிலின் முன்வரும்படி அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஜெர்மானிய அரசரான சிகிஸ்மான்ட் (Sigismund)  நல்ல முறையில் அவர் விசாரிக்கப்படுவார் என்று கொடுத்த வாக்கின் காரணமாக ஹஸ் கான்ஸ்டன்ஸ_க்குப் போனார். ஆனால், உடனடியாக அங்கே அவர் சிறையில் தள்ளப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டார். அவரை உடனடியாக விடுவிக்கும்படி அரசன் உத்தரவிட்ட போதும், போப்பினதும், கார்டினல்களுடையதும் பயமுறுத்தலுக்கு அடங்கி அந்த உத்தரவை அவன் மீளப்பெற்றுக்கொள்ள நேர்ந்தது. 

ஏழு மாதங்களுக்கு சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டபின் பெயரளவுக்கு அவர் விசாரனைக்குக் கொண்டுவரப்பட்டார். எதிரிகள் விசாரனை மண்டபத்தில் அவரைப் பேசவிடாமல் ‘நீ எழுதியவற்றை மறுத்துரை’ என்று கூக்குரலிட்டனர். மாறுத்தரமாக, ‘கர்த்தருடைய வார்த்தைக்கு எதிராக இருந்தால் மட்டுமே தான் எழுதியவற்றை மறுத்துரைப்பேன்’ என்று ஹஸ் ஆணித்தரமாகக் கூறினார். கி.பி. 1415 ஆம் ஆண்டில் கவுன்சிலினால் தீர்ப்பளிக்கப்பட்டு கான்ஸ்டன்சுக்கு வெளியில் ஜனங்கள் அனைவரும் காணத்தக்கதாக நகர அதிகாரிகளால் அவர் மிகவும் கொடூரமான முறையில் நெருப்பில் போடப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்டார். இவ்வாறு சத்தியத்திற்காக ஹஸ் இரத்தசாட்சியாக மரித்தார்.

நீதிமானான ஜோன் ஹஸ் உயிரோடு எரிக்கப்பட்டதற்கு மூலகாரணமாக இருந்த போப் 23ம் ஜோன் (Pope John XXIII)  என்பவரோ மிகமோசமான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். வரலாறு இந்தப் போப்பைப் பற்றி எந்த நல்ல வார்த்தைகளையும் சொல்லவில்லை. இப்படியாக உரோமன் கத்தோலிக்க மதத்திற்கெதிரான சீர்திருத்தப் போராட்டம் தலையெடுக்க ஆரம்பித்தது. அப்போதிருந்த அதிகார வெறிபிடித்த போப்பும், அவரைச் சார்ந்தவர்களும் தமக்கெதிராகப் புறப்பட்டவர்களை உயிரோடு கொளுத்தவும் தவறவில்லை. எந்தளவுக்கு  கத்தோலிக்க மதம் அக்காலத்தில் வேதாகம சத்தியங்களுக்கு முரணாகச் செயற்பட்டு வந்துள்ளது என்பதை வரலாறு இன்றெமக்கு விரல்சுட்டி காட்டுகின்றது. இருந்தபோதும், சத்தியத்தை அம்மதத்தால் புதைத்துவிட முடியவில்லை. சத்தியத்தின் மீது வாஞ்சையுள்ளவர்களை அதனால் பேசாமல் அடக்கிவைத்துவிடவும் முடியவில்லை.

ஆம் நண்பர்களே, ஜோன் ஹஸ்ஸின் வாழ்க்கைக்சரிதை பற்றியும், அவர் எவ்வாறு சத்தியத்திற்கு சான்று பகிர்ந்தார் என்பதையும் இன்று கற்றுக்கொண்ட நாம், இதுவரையில் நம்முடைய வாழ்க்கையில், குடும்பத்தில், பாடசாலையில், சமுதாயத்தில் சத்தியத்திற்கு சான்றுபகிர்ந்திருக்கிறோமா? அல்லது சான்றுபகிர வெட்கப்பட்டிருக்கிறோமா? என்று ஒரு கணம் நம்மைநாமே ஆராய்;ந்து பார்ப்போம். இயேசு கிறிஸ்துவைக் குறித்தும், அவருடைய வார்த்தைகளைக் குறித்தும் பிறருக்கு அறிவிக்கவும் சத்தியத்திற்கு சான்று பகிரவும் இன்று நாம் வெட்கப்பட்டோமானால், எம்மைக் குறித்து இயேசு கிறிஸ்துவும் தமது பிதாவின் மகிமைபொருந்தினவராய்ப் பரிசுத்த தூதர்களோடுங்கூட வரும்போது வெட்கப்படுவார் என்று மாற்கு 8:38 இல் இயேசு தாமே கூறியுள்ளார். 

மேலும், ‘சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்’ என்று யோவான் 8:32 இல் எழுதப்பட்டுள்ளது. இங்கு ‘சத்தியம்’(உண்மை) என்பது தேவனுடைய வார்த்தையைக் குறிக்கிறது. மேலும் அதனை யோவான் 1:1, 8:36 உடன் ஒப்பிட்டு பார்க்கும்; போது தேவனுடைய வார்த்தை என்பது இயேசுவையே குறிக்கிறது என்பது தெளிவாகிறது. எனவே, சத்தியமும் தேவனுடைய வார்த்தையும் இயேசுவும் ஒன்றுதான் என்கிற முடிவுக்கு எம்மால் வரமுடியும். ஆகவே, நாம் சத்தியத்தை அதிகமாய் அறியும் போது இயேசுவைப் பற்றி அதிகமாய் அறிந்து கொள்ளுகிறோம். அந்த சத்திய வார்த்தை (இயேசு கிறிஸ்து) எம்மை விடுதலையாக்குகிறது. ஆகவே, எமக்கு விடுதலைகொடுத்த அந்த சத்தியத்திற்காக சான்று பகிர நாமனைவரும் கடமைப்பட்டுள்ளோம். இன்று தொடக்கம் ஜோன் ஹஸ்ஸை போன்று எப்போதும் வெட்கப்படாலும் பயப்படாமலும் ஆண்டவர் தரும் பெலத்தோடும், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலோடும் சத்தியத்திற்கு சான்று பகிர எம்மை அர்ப்பணிப்போமாக!

“என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெபஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும்; உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள். ஆனாலும் அது உங்களுக்குச் சாட்சியாவதற்கு ஏதுவாயிருக்கும். ஆகையால் என்ன உத்தரவு சொல்லுவோமென்று கவலைப்படாதிருக்கும்படி உங்கள் மனதிலே நிர்ணயம்பண்ணிக்கொள்ளுங்கள். உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.”

(லூக்கா 21:12-15)





Comments

Popular posts from this blog

கர்த்தர் பேரில் பற்றுதலாய் இருப்போம் | SHORT STORY

by ரஜீவனி அக்கா >>> ஒரு சூப்பர் மார்க்கட் ஒன்றிலே, தன் சிறுபிள்ளையுடன் ஒரு தாயார் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்.  அந்த குட்டிப்பிள்ளை கடையில் அடுக்கி வைத்திருந்த ஒரு ட்ரோன் ஹெலிகொப்டரை தூக்கி வைத்துக்கொண்டு “எனக்கு இது வேண்டும்” என்று அழுதது.  தாய் ஏதோ ஒரு நன்மை கருதி, இதை நீ விளையாடும் அளவுக்கு உன் வயது பக்குவம் பெறவில்லை. இது உனக்கு வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே வேறு பொருட்களை எடுத்த வண்ணம் நகர்ந்தாள்.  தாய் வாங்கித் தராததைக் கண்டு குழந்தை காலை உதைத்து உதைத்து அழுதது.  தாயும் அவள் பங்கிற்கு எவ்வளவோ சொல்லி, கவனத்தைத் திருப்ப முயன்றும் முடியவில்லை.  வழியெல்லாம் அழுது அடம்பிடித்துக் கொண்டே சென்றது. ஒரு வழியாக குழந்தையை சமாளிக்க இயலாமல் அதை வேண்டி கொடுத்தார். வீடு திரும்பியதும் குழந்தைக்கு அதை சரியாக இயக்க தெரியாததால் மேலே பறந்து கொண்டிருந்த ட்ரோன் ஹெலிகொப்டர் கீழே விழுந்து உடைந்து போனது..... நாமும் கூட ஏதாவது ஒரு காரியத்தை விரும்பி ஆண்டவரிடம் கேட்கலாம்.  அது எப்படியாவது கிடைக்க வேண்டுமென்று ஆசையாய் எதிர்பார்க்கலாம்.  ஆனால் நம்மைக் குறித்து ...

மருத்துவ மிஷனரி - ஜோன் ஸ்கடர் ( Medical missionary - Dr. John Scudder Sr.)

by  டேவிட் அண்ணா >>> மருத்துவ மிஷனரி - ஜோன் ஸ்கடர் (Dr. John Scudder Sr.) - கி.பி.1793 - 1855 மருத்துவர் ஐடா ஸ்கடரை (Dr. Ida Scudder) பற்றி கேள்விப்படாதோர் யாருமே இருக்கமாட்டோம். ஆனால் முன்னோடி மருத்துவ மிஷனரியான அவரது தாத்தா ஜோன் ஸ்கடர் சீனியர் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தாத்தா ஜோன் ஸ்கடரில் ஆரம்பித்து பேத்தி ஐடா ஸ்கடர் வரை இரண்டு தலைமுறைகளாக ஸ்கடர் குடும்பத்தினர் இலங்கையர், இந்தியருக்கு மருத்துவ மற்றும் ஆன்மீக சேவை செய்திருக்கிறார்கள். என்னவொரு அர்ப்பணிப்பு பாருங்கள். இன்று ஜோன் ஸ்கடர் பற்றி ஒருசில காரியங்களை தெரிந்து கொள்ளலாம். அவர் 1793ம் ஆண்டு செப்டெம்பர் 3ம் திகதி அமெரிக்காவின் நியூ ஜேர்சி மாகாணத்தில் ப்ரிஹோல்ட் எனும் ஊரில் (Freehold, New Jersey, USA) பிறந்தார். சிறுவயதிலிருந்தே தேவையுள்ளோருக்கு உதவும் இரக்க குணம் நிறைந்தவராகக் காணப்பட்டார். எப்போதுமே ஜோனிற்கு கிறிஸ்தவ மனநிலை உண்டு என அவரது குழந்தைப் பருவம் பற்றி அவரது அம்மா கூறியிருக்கிறார். படிப்பில் கெட்டிக்காரனாகவிருந்த அவர் Princeton University மற்றும் New York College of Physicians and Surgeons இ...

கிறிஸ்தவ வழிபாட்டில் விக்கிரக ஆராதனை சூட்சுமமாய் உள்நுழைந்த வரலாறு

by  டேவிட் அண்ணா >>> கி.பி.7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மகா கிரெகரி சபைகளில் படங்களும், விக்கிரகங்களும் இருக்க அனுமதி தந்திருந்தார். ஆனால், அவற்றை வழிபடவோ, வழிபாட்டுக்குத் துணையாகவோ பயன்படுத்தக்கூடாது என்ற தடையும் இருந்தது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இது மாறி படங்களுக்கு முன் நின்று ஜெபிப்பதும், முத்தமிடுவதும், படங்களைச்சுற்றி நின்று வழிபாடு செய்வதும் ஆரம்பித்ததால் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை ‘விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள்’ என்று குற்றம் சாட்டினார்கள்.  படங்களும், விக்கிரகங்களும் அழகாக இருக்கும் என்றும், சமய போதனைகள் நடத்துவதற்கு துணையாக இருக்கும், விக்கிரகங்ளென்பது புறஜாதியார் வழிபடும் சிற்பங்களைத் தான் குறிக்கிறது மாறாக நம்முடைய கடவுளை வழிபட நாம் உண்டாக்கிய சிற்பங்களை அவை குறிக்காது என்றெல்லாம் தவறாகவும் வேதாகம சத்தியத்திற்கு முரணாகவும் காரணங்காட்டி படங்களையும், விக்கிரகங்களையும் வழிபாட்டில் பயன்படுத்த அனுமதித்தவர்களுடைய செயல்களை முஸ்லீம்கள் கூடப் பார்த்து சிரிக்கும் நிலை உருவாகியது துக்ககரமானதே. கி.பி. 726 ஆம் ஆண்டில் கிழக்குப் பிராந்தியத்தின் பேரரசாக இருந்த 3ம் லிய...