Skip to main content

அமெரிக்க மிஷனரி டேவிட் பிறேய்நாட் | American missionary - David Brainerd | (1718 -1747)



by டேவிட் அண்ணா

>>>

David Brainerd சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் ஜீவித்திருந்த போதிலும் இன்றும் மங்கா புகழ் பெற்று விளங்குகிறார். காரணம் அவருக்கிருந்த ஆத்தும தாகம் அத்தனை விலையேறப்பெற்றது. எம்மையும் இன்று ஒரு கணம் அவரை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. 29 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இவர் வசதியான வாழ்க்கையை விட்டு எளிமையான செவ்விந்திய மக்களிடையே சென்று தேவனுடைய ஊழியத்தைச் செய்தார். 1718, ஏப்ரல் மாதம் 20ம் திகதி அமெரிக்காவிலுள்ள ‘Haddam’ என்ற ஊரில் பிறந்தார். தனது ஒன்பதாவது வயதில் தன் தந்தையாரை இழந்தார். பின்னர்; பதினான்காம் வயதில் தனது தாயாரை இழந்து அனாதையாக விடப்பட்டார். அதனால் சிறுவயது முதல் சோக மனப்பான்மை உடையவராகக் காணப்பட்டார்.

பாவத்தைக் குறித்த பயம் இல்லாவிட்டாலும் தன் சரீர பெலவீனத்தினிமித்தம் மரணத்தைக் குறித்த பயம் இவரிடம் காணப்பட்டது. கெட்ட வாலிபருடைய சகவாசத்தை விரும்பாவிட்டாலும் களியாட்டுக்கள் அவருக்கு அதிக பிரியமாயிருந்தது. எவ்வளவு ஆவலுடன் அங்கு செல்வாரோ, அதே ஆவலோடு திரும்பாமல் மனச்சாட்சியில் கறை படிந்தவராய் வேதனையோடு வீடு திரும்புவார். 1737ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ‘ட்ரம்ப்’ எனுமிடத்திலுள்ள பண்ணையொன்றில் வேலை பார்த்தார். அங்கே முதியோர்களோடு பழக ஆரம்பித்ததன் விளைவாக வேதத்தை நன்கு வாசித்து, தியானிக்க ஆரம்பித்தார். மேலும் தன் சகோதரனுடன் சேர்ந்து ஆவிக்குரிய காரியங்களில் ஈடுபடவும் ஆரம்பித்தார்.

ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று, தான் தேவனுடைய கோபாக்கினைக்கு ஆளாகியுள்ளதாக தன் மனதில் உணர்த்தப்பட்டு அதிக கவலைக்குள்ளானார். ஆனாலும் தேவனுக்காக மத சம்பந்தமான காரியங்களில் (வேதத்தை பிறருக்கு போதித்தல், ஆராதனையில் பங்கெடுத்தல், தான தருமம் புரிதல் போன்றவை) ஈடுபடுவதால் தேவன் பரிதாபம் கொண்டு தன்னை ஏற்றுக்கொள்வார் என்று எண்ணி தன் சுயநீதியில் தங்கிவாழ ஆரம்பித்தார். ஆனாலும் அவர் இருதயம் கவலையால் நிறைந்திருந்தது. திடீரென்று பூமி பிளந்து நரக கல்லறைக்கு போய் விடுவேனோ என்ற பயம் அவருக்கு அதிகமாயிற்று. அவர் செய்த அக்கிரமங்கள் மலை போல் அவர் கண் முன் வந்து நின்றன. எப்படி ஆண்டவரிடம் சேருவது என்று சிந்தித்தார். தன்னைத்தானே விடுவித்துக் கொள்ளுவதற்காக எடுத்துக்கொண்ட முயற்சிகள் வீண் என்று கண்டு கொண்டார்.

1739ம் ஆண்டு ஜூலை மாதத்தில் தேவனிடம் தனியாக ஜெபிக்கச் சென்றார். தேவனை அவருடைய இருதய கண்கள் கண்டன. மாலை இருட்டும் வரை அந்நிலையிலே நின்றார். அனைத்தும் புதியதாயின. தேவனுடைய மகத்துவமும் ஆழமும் அவரை மெய் மறக்கும் படி செய்து விட்டன. பின்பு ‘தேவனுடன் ஒரு மணி நேரம் கழிப்பது, இவ்வுலக இன்பங்களுக்கு இணையாகாது’ என்று கண்டு கொண்டார். உபவாசிக்கவும், ஜெபிக்கவும் ஆண்டவர் தம்முடைய அறுவடைக்கு தன்னை அனுப்பும் படி வேண்டினார். புறஜாதி மக்களுக்காக வியாகுலத்தோடு ஆண்டவருடைய சமூகத்தில் நின்றார். 

ஜூன் மாதம், 1743ம் ஆண்டு தன்னுடைய சுவிசேஷ ஊழியத்தை தேவன் ஆசீர்வதிக்கும் பொருட்டு ஒருநாளை உபவாச ஜெபத்திற்காக ஒதுக்கி வைத்தார். என்றுமே கண்டிராத ஒரு அனுபவத்தை அந்நாளில் பெற்றார். இதே நிலையில் இருந்துவிடலாமே என்று ஏங்கினார். David Brainerd அமெரிக்காவின் பூர்வீககுடிகளான செவ்விந்தியர் (Stockbridge Delaware and Sasquehanna Tribes of Indians) வசிக்கும் பல இடங்களுக்கு சென்று ஊழியம் செய்துள்ளார். முதன் முதலில் செவ்விந்தியர் வாழ்ந்த ‘கௌனாமிக்’ (Kaunameekஎன்கிற இடத்திற்கு சென்று அங்கு வைக்கோல் போர் ஒன்றை தெரிந்து கொண்டு அதில் தங்கினார். அதிகாலையில் எழுந்து ஜெபித்து வேதத்தை தியானித்த பின்பே, செவ்விந்தியருக்கு இயேசுவை அறிவிப்பார். சிலர் அமைதலாக கேட்டனர். சிலர் சிரத்தை காண்பித்தனர். 

‘உங்கள் பிரசங்கத்தை கேட்ட மாத்திரத்தில் என் இருதயம் கதற ஆரம்பித்தது’ என்று ஓர் தாயார் அவரிடம் ஒருநாள் கூறினார்கள். டேவிட்டுக்கு ஒரே சந்தோஷம். எனினும் அங்கு அவருடைய ஊழியம் மகா கடினமாய் இருந்தது. சரீரம் பலவீனமடைந்தது. தினமும் ஒன்றரை மைல்கள் தூரம் நடந்து சென்றே ஊழியம் செய்ய வேண்டும். அவருடைய ஆகாரமோ கொஞ்சம் வறுத்த பயறும், நெருப்பில் சுடப்பட்ட ரொட்டியுமே. அனேக அசௌகரியங்கள் இருந்த போதிலும் கஷ்டத்தை சந்தோஷமாக தாங்கிக் கொள்ளும் கிறிஸ்துவின் நல் போர்ச்சேவகனாய் விளங்கினார். அனேகநேரம் தனித்தே இருந்தார். ஆங்கிலத்தில் பேசுவதற்கு அவருடைய மொழிபெயர்ப்பாளரை தவிர வேறு எவரும் இல்லை. ஒரு முறை பதினைந்து மைல்கள் நடந்து சென்றால் தான் ரொட்டி வாங்க முடியும் என்ற நிலையில் செவ்விந்தியரின் உணவை சாப்பிடக் கற்றுக்கொண்டார். சரீர பலவீனத்தின் நிமித்தம் சிறிது காலம் அவருடைய சொந்தவிடம் சென்று மீண்டும் செவ்விந்தியரிடமே திரும்பினார்.

உபத்திரவங்கள், சோர்வுகள், கஷ்டங்கள் இவைகளின் மத்தியில் இந்த நீர்க்குமிழி போன்ற வாழ்வை ஆண்டவருக்கு அர்ப்பணிக்குமாறு வேண்டினார். மரண அடக்க ஆராதனையொன்றில் அவர் கொடுத்த செய்தியால் அனேகர் தொடப்பட்டனர். குதிரை மீது சவாரி செல்லும் நேரங்களிலெல்லாம் செவ்விந்திய மக்களுக்காக ஜெபிப்பது வழக்கம். ஒருமுறை களியாட்டத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவித்தார். ஒரு பிரயோஜனமும் இல்லை. உடனே சாத்தான், ‘இப்பேர்ப்பட்ட மூட நம்பிக்கையுடைய செவ்விந்தியர்களை உன்னால் இரட்சிக்கக் கூடுமோ?’ என்ற கேள்வியை அவரின் மனதில் எழுப்பினான். எனினும் தேவனின் ஒத்தாசையால் அதை மேற்கொண்டார். ஆண்டவருடைய சக்தி எல்லாவற்றிற்கும் மேலானது என்பதை உணர்ந்துகொண்டு தொடர்ந்து அங்கு பணியாற்றினார்.

ஒருமுறை செவ்விந்தியருக்கு பிரசங்கம் செய்யும் போது அவர்கள் ஆத்தும வியாகுலம் அதிகரித்ததால் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தனர். கிறிஸ்து தங்களை முற்றிலுமாக கழுவி சுத்திகரிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அன்று அனேகர் தொடப்பட்டனர். அக் கிராமத்திலிருந்த அனைவரும் வீடு தவறாமல் அழுது ஜெபித்தனர். இது இன்னும் ஊழியத்தில் அவரை உற்சாகமூட்டியது. எனினும் சிலர் அவரை ‘தேசதுரோகி’ என்று பொய்யாய் குற்றஞ்சாட்டி உபத்திரவப்படுத்தினர். அப்படியிருந்தும் அவைகளால் அவர் சோர்ந்து போகாது ‘தேவன் தன் உயர்ந்த அடைக்கலமானவர்’ என்று கூறி தன்னை திடப்படுத்திக் கொண்டார். இவ்வாறு டேவிட் பிரேயினாட் கிறிஸ்துவுக்காக சகல உபத்திரவங்களையும் பொறுமையாக சகித்து, தேவன் தனக்கு கொடுத்த வேலையை வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்துக் கொண்டவராய் 1747ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஒன்பதாம் திகதியன்று இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தார். இவரது முன்மாதிரியான வாழ்வு பிற்கால மிஷனரிகளான வில்லியம் கேரி (William Carey), மற்றும் ஜிம் எலியட் (Jim Elliot), ஜேம்ஸ் பிரேயினாட் டெய்லர் (James Brainerd Taylor)  மற்றும் பல கிறிஸ்தவர்களுக்கு மிஷனரி ஊழியத்தின் மீது பெரும் ஆர்வத்தைத் தூண்டியது.

ஆம் எனதருமை நண்பர்களே, சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து அனாதையாய் அலைந்த டேவிட் பிரேயினாட்டை உலகமறியச் செய்த தேவன் தம் திட்டத்தை நிறைவேற்ற இன்று உங்களையும் அழைக்கிறார். இன்றும் கூட பாவ அடிமைத்தனங்களிலும், சாபங்களிலும், நோய்களிலும், புறக்கணிப்பு, மன வேதனை, கஷ்டங்கள் போன்றவற்றின் மத்தியில் நம்பிக்கையிழந்து, சரியான வழிகாட்டுதலின்றி, தேவனற்று வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்கள் உலகெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு கிறிஸ்து தரும் விடுதலையை எடுத்து கூறி, நல்வழி காட்டி, விடிவெள்ளி நட்சத்திரமாம் இயேசுவண்டை வழிநடத்தவும், நமக்கு கொடுக்கப்பட்ட வாழ்நாளில் இயேசு இராஜாவின் மகிமைக்காக ஏதாகிலும் சாதிக்கவும் முன்வருவோமாக!

‘ஆகையால், மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.’ 

(எபிரேயர் 12:1)

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!







Comments

Popular posts from this blog

கர்த்தர் பேரில் பற்றுதலாய் இருப்போம் | SHORT STORY

by ரஜீவனி அக்கா >>> ஒரு சூப்பர் மார்க்கட் ஒன்றிலே, தன் சிறுபிள்ளையுடன் ஒரு தாயார் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்.  அந்த குட்டிப்பிள்ளை கடையில் அடுக்கி வைத்திருந்த ஒரு ட்ரோன் ஹெலிகொப்டரை தூக்கி வைத்துக்கொண்டு “எனக்கு இது வேண்டும்” என்று அழுதது.  தாய் ஏதோ ஒரு நன்மை கருதி, இதை நீ விளையாடும் அளவுக்கு உன் வயது பக்குவம் பெறவில்லை. இது உனக்கு வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே வேறு பொருட்களை எடுத்த வண்ணம் நகர்ந்தாள்.  தாய் வாங்கித் தராததைக் கண்டு குழந்தை காலை உதைத்து உதைத்து அழுதது.  தாயும் அவள் பங்கிற்கு எவ்வளவோ சொல்லி, கவனத்தைத் திருப்ப முயன்றும் முடியவில்லை.  வழியெல்லாம் அழுது அடம்பிடித்துக் கொண்டே சென்றது. ஒரு வழியாக குழந்தையை சமாளிக்க இயலாமல் அதை வேண்டி கொடுத்தார். வீடு திரும்பியதும் குழந்தைக்கு அதை சரியாக இயக்க தெரியாததால் மேலே பறந்து கொண்டிருந்த ட்ரோன் ஹெலிகொப்டர் கீழே விழுந்து உடைந்து போனது..... நாமும் கூட ஏதாவது ஒரு காரியத்தை விரும்பி ஆண்டவரிடம் கேட்கலாம்.  அது எப்படியாவது கிடைக்க வேண்டுமென்று ஆசையாய் எதிர்பார்க்கலாம்.  ஆனால் நம்மைக் குறித்து ...

மருத்துவ மிஷனரி - ஜோன் ஸ்கடர் ( Medical missionary - Dr. John Scudder Sr.)

by  டேவிட் அண்ணா >>> மருத்துவ மிஷனரி - ஜோன் ஸ்கடர் (Dr. John Scudder Sr.) - கி.பி.1793 - 1855 மருத்துவர் ஐடா ஸ்கடரை (Dr. Ida Scudder) பற்றி கேள்விப்படாதோர் யாருமே இருக்கமாட்டோம். ஆனால் முன்னோடி மருத்துவ மிஷனரியான அவரது தாத்தா ஜோன் ஸ்கடர் சீனியர் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தாத்தா ஜோன் ஸ்கடரில் ஆரம்பித்து பேத்தி ஐடா ஸ்கடர் வரை இரண்டு தலைமுறைகளாக ஸ்கடர் குடும்பத்தினர் இலங்கையர், இந்தியருக்கு மருத்துவ மற்றும் ஆன்மீக சேவை செய்திருக்கிறார்கள். என்னவொரு அர்ப்பணிப்பு பாருங்கள். இன்று ஜோன் ஸ்கடர் பற்றி ஒருசில காரியங்களை தெரிந்து கொள்ளலாம். அவர் 1793ம் ஆண்டு செப்டெம்பர் 3ம் திகதி அமெரிக்காவின் நியூ ஜேர்சி மாகாணத்தில் ப்ரிஹோல்ட் எனும் ஊரில் (Freehold, New Jersey, USA) பிறந்தார். சிறுவயதிலிருந்தே தேவையுள்ளோருக்கு உதவும் இரக்க குணம் நிறைந்தவராகக் காணப்பட்டார். எப்போதுமே ஜோனிற்கு கிறிஸ்தவ மனநிலை உண்டு என அவரது குழந்தைப் பருவம் பற்றி அவரது அம்மா கூறியிருக்கிறார். படிப்பில் கெட்டிக்காரனாகவிருந்த அவர் Princeton University மற்றும் New York College of Physicians and Surgeons இ...

கிறிஸ்தவ வழிபாட்டில் விக்கிரக ஆராதனை சூட்சுமமாய் உள்நுழைந்த வரலாறு

by  டேவிட் அண்ணா >>> கி.பி.7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மகா கிரெகரி சபைகளில் படங்களும், விக்கிரகங்களும் இருக்க அனுமதி தந்திருந்தார். ஆனால், அவற்றை வழிபடவோ, வழிபாட்டுக்குத் துணையாகவோ பயன்படுத்தக்கூடாது என்ற தடையும் இருந்தது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இது மாறி படங்களுக்கு முன் நின்று ஜெபிப்பதும், முத்தமிடுவதும், படங்களைச்சுற்றி நின்று வழிபாடு செய்வதும் ஆரம்பித்ததால் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை ‘விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள்’ என்று குற்றம் சாட்டினார்கள்.  படங்களும், விக்கிரகங்களும் அழகாக இருக்கும் என்றும், சமய போதனைகள் நடத்துவதற்கு துணையாக இருக்கும், விக்கிரகங்ளென்பது புறஜாதியார் வழிபடும் சிற்பங்களைத் தான் குறிக்கிறது மாறாக நம்முடைய கடவுளை வழிபட நாம் உண்டாக்கிய சிற்பங்களை அவை குறிக்காது என்றெல்லாம் தவறாகவும் வேதாகம சத்தியத்திற்கு முரணாகவும் காரணங்காட்டி படங்களையும், விக்கிரகங்களையும் வழிபாட்டில் பயன்படுத்த அனுமதித்தவர்களுடைய செயல்களை முஸ்லீம்கள் கூடப் பார்த்து சிரிக்கும் நிலை உருவாகியது துக்ககரமானதே. கி.பி. 726 ஆம் ஆண்டில் கிழக்குப் பிராந்தியத்தின் பேரரசாக இருந்த 3ம் லிய...