by பிறேமன் அண்ணா >>> நூற்றாண்டு காலங்களாக ஓவியக் கலை என்பது வரலாற்றின் வெவ்வேறு கட்டங்களில் தனிச்சிறப்புடன் சிறந்து விளங்கிய ஒரு கலை ஆகும். அழகியல் வெளிப்பாட்டுக்காக மட்டுமன்றி, பலதரப்பட்ட அரசியல், பொருளாதார, மனித வளர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஊடகமாக இருந்திருக்கிறது. இன்றைக்கும் அதே சிறப்புடன், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் காரணியாக ஓவியங்களும் ஓவியக் கலையும் திகழ்கின்றன. இன்றைக்கு கிறிஸ்தவர்கள் மத்தியிலும், கிறிஸ்தவ ஊழியங்கள், விசேடமாக நற்செய்தி பணியில் இசை என்பது பெருமளவில் பயன்படும் ஒன்றாகவும், வெளிப்படையாக பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாகவும் இருக்கிறது. இதற்கு நல்ல உதாரணம், நிகழ்காலத்தில் YouTube ல் கிறிஸ்தவ நற்செய்தி மற்றும் ஆராதனை பாடல்களுக்கு இருக்கும் முக்கியத்தைக் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதே அளவுக்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது ஒன்றே ஓவியங்கள். கர்த்தரின் அபிஷேகம் நிரம்பிய, அர்ப்பணிக்கப்பட்ட அநேக நற்செய்தி ஓவியர்களைக் நம்மிடத்தே காணவேண்டும் என்பது எனது நீண்ட நாள் அவா. எமது ஆண்டவரின் மேன்மையைப் பற்றியும், அவர் செய்த மற்றும் செய்...