by டேவிட் அண்ணா >>> “GREAT FAITH IS THE PRODUCT OF GREAT FIGHTS” -SMITH WIGGLESWORTH- நம் அருள் நாதர் இயேசுகிறிஸ்து, தாம் உலகத்திலிருந்த நாட்களிலே, மரித்தோரை உயிரோடெழுப்பினார் அத்துடன் தானும் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாளில்; உயிரோடெழுந்தார். பழைய ஏற்பாட்டுக் காலத்திலே, எலியாவும், எலிசாவும் மரித்துப்போன சிறுவர்களை உயிரோடெழுப்பினார்கள். புதிய ஏற்பாட்டிலே ஆதி அப்போஸ்தலர்களான பேதுருவும், பவுலும் மரித்தோரை உயிரோடெழுப்பினார்கள் என வேதாகமம் கூறுகிறது. மரித்தோர் எழுப்பப்படுவதெல்லாம் வேதாகம காலத்தோடு முடிந்துவிட்டதா? இக் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் எழுந்தவர்தான் “விசுவாச அப்போஸ்தலன்” என்றழைக்கப்படும் ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த். இவர் கி.பி.1859-ஆம் வருஷம் ஜூன் மாதம் 8ம் திகதி, இங்கிலாந்து தேசத்திலுள்ள மென்ஸ்டன் என்ற சிறிய கிராமத்திலே ஜோன் விக்கிள்ஸ்வொர்த் - மார்த்தா தம்பதியினருக்கு பிறந்தார். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக புகைந்து கொண்டிருந்த திருச்சபையை அனல் மூட்டி, அக்கினியாய் பற்றி எரியவைக்கப் போகிறவன் அந்தக் குழந்தை என்று அந்த எளிமையான பெற்றோருக்கு அப்போது தெரியா...