(சென்ற வார கட்டுரையின் தொடர்ச்சி…….)
அந்நாட்களில் பர்மாவில் ஒரு மிஷனரி கூட இல்லை. எரிகிற வெயிலிலும் புழுதி நிறைந்த ‘ரங்கூன்;’ நகரத்திலும் சோர்வை உண்டாக்கும் சேறு நிறைந்த தெருக்களிலும் ஊழியம் செய்தனர் ஜட்சன் தம்பதியினர். புத்த மதத்தை அதிகமாகப் பின்பற்றிய பர்மிய மக்கள் மத்தியில் சாதி வேறுபாடில்லை. ஆனால் பர்மிய அரசன் பர்மாவிலுள்ள ஒவ்வொரு குடிமகனினதும் உள்ளத்தை சொந்தமாக்கி அவர்களை அடிமையாக நடத்திவந்தான். எந்த பர்மிய அரசனும் வேறுமதம் அங்கு பரவுவதை அனுமதிக்கவில்லை. நித்திய கடவுளைக் குறித்த நம்பிக்கையே அவர்களுக்கு கிடையாது. இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையிலேயே இவர்களது ஊழியம் ஆரம்பித்தது.
அந்நாட்களில் பர்மாவிலுள்ள ரங்கூன் (Rangoon) பட்டணத்தில் கொடுங்கோல் ஆட்சியில் ஆர்வம் கொண்ட ஓர் அரசன் ஆண்டு வந்தான். அவ்வரசனின் ஒவ்வொரு விருப்பமும் நாட்டின் சட்டமாக மாறியது. அரசனும் மக்களும் ‘நாட்டின் மதம் புத்த மதம்’ என கருதி வந்தனர். அம் மதத்தை ஏற்றுக்கொள்ளாத எவரும் குற்றம் புரிந்தவர்களாக கருதப்பட்டு, மரணதண்டனைக்கு ஆளானார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அங்கு பணிபுரிய ஆரம்பித்தனர் ஜட்சன் தம்பதியினர்.
தன் மனைவியின் மறைவுக்குக்குப் பின் சுமார் இருபத்து நான்கு ஆண்டுகளாக பர்மாவிலே இறைபணியாற்றினார். கி.பி.1834ம் ஆண்டு வேதாகமம் முழுமையையும் பர்மிய மொழியில் மொழி பெயர்த்து முடித்தார். மேலும், பர்மிய மொழி அகராதியின் பெரும்பகுதியையும் தொகுத்து முடித்தார். இவரது மறைவின் போது, கிட்டத்தட்ட 63 இற்கும் மேற்பட்ட தேவாலயங்கள் பர்மியர்களிடையேயும் (Burmese) கரையர்களிடையேயும் (Karen People) காணப்பட்டன. ஜட்சன் நூற்றுக்கணக்கான விசுவாசிகளுக்கு தன் கையால் ஞானஸ்நானம் கொடுத்திருக்கிறார். அத்துடன் பர்மாவிலுள்;ள ஓர் இனத்தவரான கரையர்கள் மத்தியில் ‘Ko Tha Byu’ ` 1` என்பவர் முதன் முதலில் ஜட்சனின் ஊழியத்தின் மூலம் கி;றிஸ்துவை ஏற்றுக் கொண்டார். இவர் பிற்காலத்தில் ‘கரையர்களின் அப்போஸ்தலன்’ (முயசநn யுpழளவடந) என அழைக்கப்பட்டார். 25 வருட ஊழியக் காலப்பகுதியில் 11,878 கரையர்கள் தம் பாவங்களைவிட்டு மனந்திரும்பி, ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்துவின் விசுவாசிகளானார்கள். இவ்வாறு பர்மா(மியன்மார்) எங்கும் எழுப்புதல் தீ பற்றியெரிந்தது. அனேகர் கர்த்தராகிய இயேசுவை விசுவாசித்து அவர் தரும் இரட்சிப்பை தம் வாழ்வில் பெற்றுக்கொண்டனர்.
இக்கட்டுரையை வாசித்துக்கொண்டிருக்கும் என் அருமை நண்பர்களே, அடோனிராமைப் போலவே நாமும் முதலில் நாம் இருக்குமிடத்தில், படிக்கும் பாடசாலையில் ஆண்டவரின் அன்பை பிறருக்கு எடுத்துக் கூற, சாட்சியான வாழ்வு வாழ, உப்பாய், வெளிச்சமாய் திகழ அழைக்கப்படுகிறோம். மேலும், தேவனுடைய சுவிசேஷ பணியை தேவனை அறியாத இடத்தில் செய்வதற்கு இன்றைக்கும் அழைப்பு உங்களுக்கு கொடுக்கப்படுகிறது. உங்கள் வசதி வாய்ப்புக்களைவிட்டு தேவன் காட்டும் இடத்திற்குச் செல்ல நீங்கள் ஆயத்தமா? கிறிஸ்துவின் அன்பு உங்களை நெருக்கி ஏவவில்லையோ?
“ விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு,
நித்தியஜீவனைப் பற்றிக்கொள்;
அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்…”
(1 தீமோத்தேயு 6:12)
வேதவாசிப்பு பகுதி : மத்தேயு 5:3-16, மத்தேயு 7:21
Comments
Post a Comment
Comments