இந்தியாவுக்கு வந்த ஒரு உன்னத சீடன் - அப்போஸ்தலன் தோமா - பாகம் 01 | Thomas the Apostle | FOOTPRINTS OF MISSIONARIES
by டேவிட் அண்ணா >>> ‘‘நீ வாழ்ந்தால் ஓர் கனி தரும் மரமாயிரு! மடிந்தால் ஓர் விதையாக மடி!’’ If you live, be a fruitful tree! If you fall, be a seed! -Jei Nesha - அன்பான தம்பி, தங்கைமார்களே, நீண்ட நாட்களுக்கு பின், மறுபடியும் உங்களை சந்திப்பதில் அண்ணாவுக்கு மிக்க மகிழ்ச்சி. நீங்கள் எல்லாரும் சுகமுடன் இருக்கிறீர்களா? ‘ஆம்’ என்று பலர் சொல்லும் சத்தம் என் செவியை எட்டுகிறது. சந்தோஷம்! இவ்வாரத்தில் நாம் கற்கவுள்ள இறைபணியாளரின் அடிச்சுவடுகளை பின்பற்றி; அவர் யார்? அவரின் வாழ்வு இன்று எமக்கு எவற்றை கற்றுத்தரவுள்ளது? என்பதை ஆராய்வோம், வாருங்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு சீடர்களின் பெயர்களை சொல்லுங்கள் என்று கேட்டால், சிலருடைய பெயர்களேதான் உடனடியாக எம்முடைய ஞாபகத்தில் வரும். மூன்று முறை மறுதலித்த பேதுரு, காட்டிக்கொடுத்த யூதாஸ், அன்பு சீடன் யோவான், வரிவசூலித்த மத்தேயு என்று சிலருடைய பெயர்கள்தான் முதலில் எம் வாயிலிருந்து புறப்படும். காரணம், அவை நம் மனதில் நன்றாய் பதிந்துள்ளது. ஆனால் இன்றைக்கு நாம் பார்க்கப்போகிற சீடன் பெயர் ‘திதிமு என்னப்பட்ட தோமா’. இவர்...