Skip to main content

நம்பிக்கை | SHORT STORY




by ரஜீவனி அக்கா
>>>

ஒரு வணிகர் வியாபார ஒன்று கூடலில் கலந்து கொள்வதற்காக விமானம் ஏறினார். அது மூன்று பேர் அமரும் இருக்கை ஒரு நடுத்தர வயது பெண் ஜன்னலோரமும் , நடைபாதை அருகே ஒரு  சிறிய பெண்னும் இருந்தார்கள். இவர் அவர்கள் இருவரையும் பார்த்து புன்னகைத்தவாறே தனது பெட்டியை மேலே வைத்துவிட்டு நடுவில் அமர்ந்தார்.

அவர் அந்த சிறு பெண்ணை பார்க்கும்போது தனது மகளை நினைத்தார் இருவருக்கும் ஒரே வயதுதான் இருக்கும் ... அந்த பெண் அமைதியாக வண்ணம் தீட்டி கொண்டிருந்தாள். அவரும் அந்த பெண்ணிடம் எப்போதும் போல் பேர் என்ன பொழுதுபோக்கு என்ன என்று பேச்சு கொடுத்துக்கொண்டு வந்தார்.

அதே போல் உனக்கு  பிடித்த விலங்கு எது ??? போன்ற ஒரு சில வழக்கமான கேள்வியும், கேட்டு பேசிக்கொண்டு இருந்தார் . அவர் மனதில்  இந்த சின்ன பெண் தனியாக பயணம் செய்வது விசித்திரமாக பட்டது. ஆனால் அவர் தன்னை தனது எண்ணங்களை தன்னுள்ளே புதைத்து வைத்துக்கொண்டார். 

எனினும் பயணம் முழுவதிலும் அவள் மீது ஒரு கண் வைக்கவேண்டும் என நினைத்தார் ... அவரும் பெண்ணை பெற்றவரல்லவா ??? சுமார் ஒரு மணி நேர பயணத்திற்கு பின் , விமானம் திடீரென குலுங்க தொடங்கியது . பைலட் ஒலிப்பெருக்கியின் மூலம் பயணிகளிடம்  நாம் கடினமான வானிலையை எதிர் கொண்டிருக்கிறோம் , தங்கள் இருக்கையில் பெல்ட்கள் போட்டுகொண்டு , அமைதியாக இருக்க வேண்டும் என்று அனைவருக்கும் கூறினார். அடுத்த அரை மணி நேரத்திற்கு மேல் பல முறை விமானம் குலுக்க, கடுமையான தாழ்நிலைகளும் மற்றும் திருப்பங்களை செய்து கொண்டும் சென்றது ...சிலர் உயிர் பயத்தில் அழுது கொண்டு இருந்தனர்  மற்றும் பலர்  பக்கத்து இருக்கை பெண்மணிபோல் பிராத்தனை செய்துகொண்டிருந்தனர் ...

இத்துணை விஷயங்கள் நடந்தபோதும் அந்த சிறிய பெண் மிகவும் அமைதியாக இருந்தாள் .. அவள் கலரிங் புக் பென்சில் எல்லாத்தையும் பாக்  செய்துவிட்டு அமைதியான முகத்துடன் இருந்தாள் ..இவருக்கோ ஆச்சரியம் தாங்கவில்லை.

ஒரு வழியாக விமானம் தன்னிலை அடைந்தது ...

மீண்டும் பைலட்  நிலைமை சுமூகமானதையும் இன்னும் சற்று நேரத்தில் தரை இறங்க போவதாகவும் அறிவித்தார் ..

அத்தனை பயணிகளிடம் இருந்தும் ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது. பின் அவர் அந்த சின்ன பெண்ணை நோக்கி .. பாராட்டுதலாக இந்த சிறுவயதில் உனக்கு எவ்வளவு மனதைரியம் ..

பெரியவர்கள் அனைவரும் பதட்டத்துடனும் பயத்துடனும் இருக்கும்போது நீ மட்டும் எப்படி இவ்வளவு அமைதியாக இருந்தாய் ????..என கேள்வியுடன் முடித்தார் ..

அந்த பெண் சிரித்துக்க்கொண்டே பைலட் என் தந்தை அவர் எப்படியும் என்னை கவனமாக தரையிறக்குவார் என எனக்கு தெரியும் எனவே நான் பயப்படவில்லை என கூறினாள் ..

அந்த குழந்தைக்கு தன் தந்தையின் மீது இருந்த நம்பிக்கை ...நம்மில் பலருக்கு நாம் வணங்கும் தெய்வத்தின் மீதுகூட இல்லை நம்பிக்கை வாழ்க்கைக்கு முக்கியமானதாகும். நம்பிக்கையின் அஸ்திவாரத்தில்தான் இந்தச் 

வேதாகமத்தில் தானியேல், சாத்ராக், மேஷாக், ஆபெத்நேகோ என்ற நான்கு வாலிபர்கள் தேவனுக்காக வைராக்கியங்கொண்டு அவரையே நம்பி இருந்தபடியால் அந்த நால்வரையும் தேவன் அக்கினி ஜுவிலையிலிருந்து விடுவித்தார். இதற்கு முந்தைய அநேக பரிசுத்தவான்கள் இருந்தாலும் அவர்கள் ஏதாகிலும் ஒரு வழியில் நம்பிக்கை கொடுப்பார். 

உதாரணமாக தமது ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகள் மூலமாய் அல்லது ஆசாரியர்கள் மூலமாய் தேவன் அவர்களை தைரியமூட்டி அவர்களை வழிநடத்துவார். அதனால் அவர்கள் எதையும் நம்பிக்கையோடு செய்தார்கள். ஆனால் இந்த நால்வருக்கும் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ தேவன் அவர்களுக்கு நம்பிகையூட்டவில்லை. ஆயினும் அவர்கள் நால்வரும் தேவன் மீது அதீத நம்பிக்கை உள்ளவர்களாய் இருந்தபடியால் அவர்கள் மரண ஆக்கினையிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்.

கஷ்டத்தின் காலத்தில் மட்டும் தேவன் மீது நம்பிக்கை வைப்பது அவரை இழிவுபடுத்துவதற்கு சமம். ஆனாலும் தேவன் நம்மை விடுவிப்பார் அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். வேதம் இவ்வாறு கூறுகிறது,

ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து. இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.


1 பேதுரு 1:13 ,எனவே தெளிந்த புத்தியோடு தேவன் மேல் நம்பிக்கை வைப்போம் தேவ கிருபையை பெற்றுக் கொள்வோம்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக !!!



Comments

Popular posts from this blog

எனக்கொத்தாசை வரும் பர்வதம் | Enakkoththasai Varum Parvatham | MUSIC NOTES & CHORDS

by  ஜெரேம் அண்ணா >>>

ஆவியின் கனிகள் @ QUILLING & NEEDLEWORK

by  ஷரோன் அக்கா >>>

தேவகுமாரா என்னை நினைச்சிடுங்க | Devakumara Enna Ninachchidunga | MUSIC NOTES AND CHORDS

by  ஜெரேம் அண்ணா >>>