by ரஜீவனி அக்கா
>>>
மகனை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு தந்தையின் உணர்வு பூர்வமான எச்சரிக்கை....
தன் மகன் நிரோமை சில விசயங்களுக்காக அடிக்கடி கடிந்து கொள்வதால் நிரோம் தந்தையிடம் கேட்டான்... "ஏன் அப்பா எப்பவும் இப்படி கண்டிப்புடன் நடத்துகிறீர்கள்...??? என்னை கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே" என்று.... ஆனால் அதை தந்தை சற்று கஷ்டமாகவே உணர்ந்தார்... இதை எப்படி இவனுக்கு சொல்லிக்கொடுப்பது என யோசித்தார்...
ஒரு நாள் நிரோம் தன் தந்தையிடம் வந்து கேட்டான்.. "அப்பா நான் பட்டம் விட்டு விளையாடபோகிறேன், நீங்களும் வாங்க.." என அழைத்துக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றான்... பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தான்... அப்படி மகிழ்ந்திருக்கும் வேளையில் தந்தை கேட்டார்... "பட்டம் மேலே பறக்க, பறக்க எவ்வளவு அழகாய் இருக்கிறது.... ஆனால் அதன் விருப்பம் போல பறக்க முடியவில்லை.. அதற்கு தடையாய் இருப்பது என்னவாக இருக்கும்?" என கேட்டார்...
நிரோம் பட்டென பதில் சொன்னான்; "இந்த நூல் தான் அதை தன் இஷ்டத்திற்கு விடாமல் கட்டி வைத்திருக்கிறது" என்று சொன்னான்..
"அப்படியா" என கேட்டுவிட்டு அந்த நூலை அப்படியே அறுத்து விட்டார் தந்தை... பட்டமும் தன் இஷ்டபடி பறந்தது. ஆனால் சற்று நேரத்திலேயே கிழிந்த காகிதமாய் கீழே விழுந்தது...
தந்தை சொன்னார்.. "இந்த பட்டத்தை தன் இஷ்டபடி பறக்கவிடாமல் தடுக்கவில்லை... நேரான வழியில் இந்த பட்டம் பறந்து உயரங்களை அடைய இந்த நூல் உதவியாய் இருக்கிறது..."
இதேபோலத்தான் உன் தந்தையாகிய நானும் ஒரு நூல்தான்... நீதான் அந்த பட்டம்... நீ என்னுடைய பேச்சை கேட்டு அதன்படி நடப்பாயெனில் என் பாதுகாவலுடன் உயர பறக்கலாம்... உன் இஷ்டப்படி வாழ நினைத்தால் அந்த பட்டம் கிழிந்து காகிதம் ஆனது போல உன் வாழ்க்கையும் சீரழிந்துவிடும்...
இப்போது புரிந்திருப்பாய் ஏன் உன்னை கண்டித்தேன் என்பதனை... நூலாகிய என்னை அறுத்துவிடாதே என்று சொல்லும்போதே நிரோம் தந்தையை கட்டி அணைத்துக் கொண்டான்...!!!
என் அன்புக்குாிய பிள்ளைகளே,
மகன் மட்டுமல்ல. யாராயிருந்தாலும் நூல் என்ற பாதுகாவலாக தேவன், பிள்ளைகளுக்கு பெற்றோர் இருப்பது போல், மனைவிக்கு புருஷன், வேலை செய்கிறவா்களுக்கு மேல் அதிகாரிகள், சபை விசுவாசிகளுக்கு போதகராகிய மேய்ப்பன் இப்படி எல்லா நிலையில் இருக்கிற அனைவருக்கும் கண்டிப்புடன் நடத்தும்படி நூலாகிய ஒருவரை வைத்துள்ளாா். அப்போதுதான் பட்டமாகிய நாம் கழுகுகளை போல் உயரமாய் எல்லாவற்றுக்கும் மேலாக பறக்க முடியும். அன்பு நிறைந்த கண்டிப்பு எங்கே உள்ளதோ அங்கே சாதனைகளையும், உயா்வுகளையும், மேன்மையையும் அடுத்தடுத்து பாா்க்க முடியும். உங்களுக்கு மனதும், மாம்சமும் விரும்பும் இனிமையாய் தோன்றுகின்ற வழிகள் ஏராளம் இருக்கலாம்.. ஆனால் அவற்றின் முடிவு பயங்கரமானது..
எனவே உங்களை கண்டிப்பவருக்குக் கீழ்படிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் இனிய வாழ்வு உங்களை வரவேற்கும்...!!!
வேதாகமம் சொல்கிறது நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனதும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே, மற்றவர்களைப் போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாய் இருந்தோம். தேவனோ இரக்கத்தில் ஜசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார். கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்
அன்பும், கண்டிப்புமுள்ள பெற்றோரும், கணவனும், மேலதிகாரிகளும்,நல்ல சபை போதகரும், பாிசுத்தவான்களும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் பாக்கியசாலிகள். அது ஒரு வரம் என்றே சொல்லலாம். பட்டம் நூலுடைய கட்டுப்பாட்டில் இருந்து உயர பறக்கிறது போலுள்ள நல்ல வாழ்க்கை உங்களுக்கு அமைவதாக!
இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள். பெருமை உள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்
(1 பேதுரு 5:5,6)
மேற்கண்ட வேதவசனம் சொல்கிறபடி நடவுங்கள் அதனால் யாருமே எட்டாத உயரத்திற்கு தேவன் உங்களை கொண்டு செல்லுவாா்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக !!!
Comments
Post a Comment
Comments